பிக்பாஸ் ஐந்தாவது சீசன் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.! ரசிகர்களே தயாராக இருங்கள்.

கமலஹாசன் தொகுப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 4 வரைக்கும் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் சீசன் 5 தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வேலைகளும் நடைபெற்று வருகின்றன என பிக்பாஸ் குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் எடுக்கப்படும் பிக் பாஸ் சீசன் 5வது ப்ரோமோ வீடியோ வருகின்ற ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி மாலை 7 மணி அளவில்  வெளியாகும் என பிக்பாஸ் நிகழ்ச்சி முழு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்று கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் இன்று வரையிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

bigg boss
bigg boss

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நடிகர் நடிகைகள் என சினிமாவில் நுழைந்து பல்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் மூலம் பல நடிகர் நடிகைகள் பிரபலமாகி உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொரோனா காரணத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்று அச்சத்தில் இருந்தார்கள் ஆனால் தற்போது பிக் பாஸ் சீசன் 5வது நிகழ்ச்சி தொடங்க உள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Leave a Comment