எதிர்பாராததை எதிர் பாருங்கள்.! கமல் வெளியிட்ட பிக் பாஸ் 5 புதிய ப்ரோமோ.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது இதற்கான பணிகளும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஆவது நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறி பிக் பாஸ் சீசன் 5ன் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்.

அதில் திருமணமான வீட்டில் ஏர்படும் குழப்பங்களை மையப்படுத்தி கொண்டு அந்த ப்ரோமோ வீடியோ உருவாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் நடிகைகள் ஏதாவது ஒரு வகையில் பிரபலம் ஆகி விடுகிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் லாஸ்லியா மற்றும் கவின்  இவர்கள் போன சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்கள் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே அப்போது உருவாகியது.

இதேபோல் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் அடைகிறார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு சினிமாவில் நடிக்கவும் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கிறது.

Leave a Comment