பிக்பாஸ் 5-ல் களமிறங்கும் மாஸ்டர் பிரபலம்.! கதறவிடும் தளபதி ரசிகர்கள்.!

0

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் தற்போது சினிமா வாய்ப்புகள் அடைந்து சினிமா துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் பிக் பாஸ் 5 வது சீசன் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் தொடங்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் அப்படி இருக்கும் வகையில் இதுவரை 16 போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் ஐந்து சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமை படுத்தி வைத்துள்ளார்கள்.

அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது, இவர்கள் அனைவரையும் ஒரு வாரம் தனிமைப்படுத்தி வைத்துக்கொள்ள பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளது அப்படி இருக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என பலர் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

மேலும் இவர்கள் வெளியிட்ட குரூப் புகைப்படத்தில் ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, கோபிநாத், ரவி, ஷாலு ஷம்மு, கண்மணி என பலர் இருக்கிறார்கள் இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் ஒரே இடத்தில் இருப்பதால் கண்டிப்பாக இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப் போகிறார்கள் என உறுதியாக கூறி வருகிறார்கள் அப்படியிருந்தும் வகையில் மாஸ்டர் படத்தில் சூப்பர் ஹிட் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய சிபி  பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ள இருக்கிறார் தகவல் கிடைத்துள்ளது.

இவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் மாணவனாக படத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் விஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் 3ஆம் தேதி மதியம் 3 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sibi-master
sibi-master