பிக் பாஸ் ஐந்தாவது சீசன் கேப்டன் யார்.? பிரியங்காவின் பன்ச்.! வைரல் ஆகுது கலகலப்பான புரோமோ video

டி ஆர் பி யில் முதல் இடம் பிடிப்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் நேற்று ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது.

இந்த ஐந்தாவது சீசனை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வந்த பிரியங்கா பாடகி சின்னப்பொண்ணு, பாடகி இசைவாணி, மதுமிதா,  யூ ட்யூபர் அபிஷேக் ராஜா, நமிதா, மாரிமுத்து, பவானி ரெட்டி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, நதியா சங், வருண், அபினை வட்டி, அக்ஷரா ரெட்டி, தாமரைச்செல்வி சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகியோர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலாக வருகிறது. இந்த ப்ரோமாவில் இந்த வார கேப்டனை தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது அப்பொழுது இந்தவார கேப்டனை தேர்வு செய்யும் நிகழ்வில் கேப்டன் தேர்வில் விருப்பமுள்ள போட்டியாளர்கள் முன்வர பிக்பாஸ் அழைத்தார்.

அப்பொழுது தேர்வில் விருப்பமுள்ள போட்டியாளர்கள் முன்வந்தார்கள் அவர்கள் பவானி ரெட்டி, சின்ன பொண்ணு, ராஜ் ஜெயமோகன், நமிதா, மாரிமுத்து, பவானி ரெட்டி ,நிரூப் நந்தகுமார் ஆயர்கள் கேப்டனாக தேர்வு செய்வதற்கு முன் வந்தார்கள். அப்பொழுது பிக்பாஸ் ஒவ்வொரு வரும் எந்த அணிக்காக கேப்டனாக இருக்க விரும்புகிறீர்கள் என கேட்டார்.

அதற்கு ராஜி ஜெயமோகன் நான் பாத்ரூம் சுத்தம் பண்றதுக்கு என சொன்னார் அதேபோல் பிரியங்கா நாங்களெல்லாம்  ஒண்ணானோம் கக்கூஸ் கழுவிப் பிரண்டானோம் என பஞ்ச் பேசினார் அப்பொழுது பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறியது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கேப்டன் யார் மற்ற அணிகளின் கேப்டன் யார் என்பது அடுத்த ப்ரம்மாவின் தெரியவரும் என தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment