இந்த சீசனில் வனிதா இவர்தான்.! பூகம்பத்தை கிளப்பிய பிக் பாஸ் போட்டியாளர்.!

0

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டது இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் திருநங்கையை களம் இறங்கினார்கள்.

ஆனால் ஒருசில காரணமாக திருநங்கை நமிதா மாரிமுத்து அதிரடியாக வெளியேறினார். முதல் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக சென்றது.  அதுமட்டுமில்லாமல் தங்களின் சோகக் கதைகளைக் அவரவர்கள் கூறி ரசிகர்களையும் போட்டியாளர்களையும் அழ வைத்தார்கள். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் கேப்டன் யார் என்பதை தேர்ந்தெடுத்தார்கள்.

கேப்டனை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு டாஸ்க் ஒன்றை வைத்து அதில் வெற்றி பெறுபவர்கள் தான் கேப்டன் என அறிவித்தார்கள் அந்த டாஸ்கில் வெற்றி பெற்றவர்தான் தாமரைச்செல்வி இவர்தான் இந்த வார கேப்டன். இதனையடுத்து நாமினேஷன் நடைபெற்றது. கேப்டனாக தாமரைச்செல்வி இருப்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

இந்தநிலையில் நேரடியாக எவிஷனுக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியானது. இந்த லிஸ்டில் தாமரைச்செல்வி மற்றும் பவானியை தவிர மற்ற 15 போட்டியாளர்கள் லிஸ்டில்  இடம் பெற்றுள்ளார்கள். அதனால் இந்த வாரம் யார் வெளியே போகப் போகிறார் என்று தெரியாமல் மக்கள் முழித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இதில் யூடியூப் அபிஷேக் ராஜா மற்ற போட்டியாளர்களை ரிவியு செய்துள்ளார் அப்பொழுது இந்த சீசனில் வனிதா என்பவர் நாதிய சங்கை தான் என குறிப்பிட்டுள்ளார் அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.