பிக் பாஸ் நான்காவது சீசன் டைட்டில் வின்னர் இவர்தான்.! வெளியானது ஓட்டிங் லிஸ்ட்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ், இந்த வருடம் நான்காவது சீசனை ஒளிபரப்பி வருகிறார்கள், இந்த நான்காவது சீசன் கொரோனா காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது.

மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 4 வது சீசனில் ரியோ, அர்ச்சனா அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத், கேப்ரிலா, ரம்யா பாண்டியன், சோம சேகர் என பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்

இவர்களில் ஆறு பேர் மட்டும் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள், அதாவது ரியோ,  ஆரி, பாலா, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சோம சேகர் இவர்கள் மட்டும்தான் உள்ளே இருக்கிறார்கள்.

இந்த 6 பேர்களில் யாராவது ஒருவர் மட்டும் தான் டைட்டில் வின்னர் ஆக ஆகப் போகிறார்கள் அதற்காக மக்களின் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது,  அந்த வகையில் மக்களின் வாக்குகள் மூலம் பிக் பாஸ் சீசன் நான்கில் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆரி என தெரிகிறது.

ஏனென்றால் மக்களின் வாக்கெடுப்புக்கு லிஸ்ட் ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது, ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் தானா என்று தெரியவில்லை.

இருந்தாலும் பொறுத்திருந்து பார்க்கலாம் பிக் பாஸ் சீசன் 4 ல் டைட்டில் வின்னர் யார் என்பதை. அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

biggboss
biggboss

Leave a Comment