ஒட்டு மொத்த இளசுகளையும் தூங்கவிடாமல் செய்வதற்கு பிக் பாஸ் சீசன் 4-ல் களமிறங்கும் செம ஹாட் நடிகை.! சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா.?

0

Actress poonam bajwa : ஒட்டுமொத்த ரசிகர்களும் பிக்பாஸ் 4 வது சீசன் எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தொலைக்காட்சி ரசிகர்களும் பிக் பாஸ் சீசன் 4 இல் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் முதல் சீசன் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, அதுமட்டுமில்லாமல் முதல் சீசனில் கலந்துகொண்ட சில போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆர்மியை  தொடங்கினார்கள். அதனால் அந்த போட்டியாளர்கள் என்ன செய்தாலும் அன்று சமூகவலைதளத்தில் டிரெண்டிங்கில் கொண்டு வந்தார்கள்.

முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி மற்றும் ஓவியா ஆகியோர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார்கள் இதனை தொடர்ந்து இரண்டாவது சீசன் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, அதுமட்டுமில்லாமல் கடந்த வருடம் ஒளிபரப்பப்பட்ட மூன்றாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, அதுமட்டுமில்லாமல் பலரும் தங்களுடைய உண்மையான முகத்தை காட்ட வில்லை மூன்றாவது சீசனில், அந்த நிகழ்ச்சிக்காக நடித்தார்கள்.

இந்தநிலையில் பிக்பாஸ் நான்காவது சீசன் தொடங்க இருக்கிறது மூன்றாவது சீசன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதிர்பார்ப்பை பெறவில்லை என்பதால் நான்காவது சீசனில் எப்படியாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளது. அதனால் பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள வைக்க பல பிரபலங்களை அணுகி வருகிறார்கள்.

Actress-Poonam-Bajwa
Actress-Poonam-Bajwa

அந்த வகையில் பிக்பாஸ் நான்காவது சீசனில் கவர்ச்சி நடிகை என்ற அடிப்படையில் பூனம் பஜ்வா அவர்களை களம் இறக்க இருக்கிறார்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பூனம் பஜ்வாவிற்கு 45 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது, இந்த தகவல் சமீபத்தில் கசிந்துள்ளது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூனம் பஜ்வா சமீபகாலமாக சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார், அந்த வகையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பல இளசுகளின் தூக்கம் அவ்வளவுதான் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.