துப்பறிவாளன் 2 ஆம் பாகத்தில் நடித்துள்ள பிக்பாஸ் 4 சர்ச்சை பிரபலம்!! படம் அப்போ தருமாருதான்

biggboss 4 contestant act in thupparivalan 2 movie: நடிகர் விஷால் தற்போது துப்பரிவாளன் 2 திரைப்படத்தை  இயக்கி, தயாரித்து, நடித்து வருகிறார் . இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பரிவாளன திரைப்படத்தை தொடர்ந்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா,  நாசர், ஜெயப்பிரகாஷ்,  ஆஷியா, கௌதமி,  ரகுமான் மற்றும் மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பறிவாளன் முதல் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தையும் மிஷ்கினை வைத்து இயக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால் விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இயக்குனர் மிஷ்கின் இந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டார். அதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்திருக்கும் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது .

suresh-chakravarthy-2
suresh-chakravarthy-2

Leave a Comment