இந்த வாரம் ஜெயிலுக்கு செல்லும் பிக்பாஸ் பிரபலம்.! ஒருவர் பாலாஜி மற்றொருவர் யார் என்று பார்த்தீர்களா.! ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் விஜய் தொலைக்காட்சி

0
balaji
balaji

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி கடந்த 6 வாரங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இதை நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, வேல்முருகன் ஆகியோர்கள் வெளியேறி விட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதும் பிக்பாஸ் ரசிகர்கள் சோர்ந்து போனார்கள் ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்தி தான் ஆட்டி படைத்து வந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குழுவிற்கு 3 நபர்களாக பிரிந்து ஐந்து குழுக்களாக விளையாடி வருகிறார்கள். இதில் சனம் ஷெட்டி, நிஷா அவர்கள் ஒரு குழுவாகவும், கபிலா, ரியோ, ஆரி ஆகிய மூவரும் ஒரு குழுவாகவும். அர்ச்சனா சம்யுக்தா, சோமசேகர் ஆகியோர்கள் ஒரு குழுவாகவும், சிவானி, அஜீத் ,ரமேஷ் ஆகியோர்கள் ஒரு குழுவாகவும், பாலா, அனிதா, சுஜித்ரா ஆகிய மூவரும் ஒரு குழுவாகவும் பிரிந்து விளையாடி வருகிறார்கள்.

தொடர்ந்து 45 மணி நேரம் மழை வெயில் என எதையும் பார்க்காமல் இந்த டாஸ்கை மிகவும் சீரியஸாக விளையாடி வந்தார் ஆனால் பாலாஜி மட்டும் பெரிதாக சீரியஸாக விளையாடவில்லை இந்த டாஸ்க் கடிகாரம் ஆக செயல்படும் மணி மூன்று மணி நேரத்தை கணக்கிட்டு கூற வேண்டும் என்பதுதான் டாஸ்க்  இதில் ஒவ்வொரு அணியும் மூன்று முறை கடிகாரத்தை செய்தார்கள்.

இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வில் இந்த டாஸ்க் காண முடிவு வெளியாகியுள்ளது அதில் பாலாஜி நினைத்தது போல அல்லாமல் ஒவ்வொரு மூன்று மணிநேரத்தை கணக்கிட அணிகள் எடுத்துக்கொண்ட நேரத்தை பிக் பாஸ் கணக்கிட்டார், அதாவது பிக்பாஸ் 3 மணி நேரத்தை கணித்து அதிக நேரம் எடுத்துக் கொண்டாளோ குறைவான நேரத்தை எடுத்துக் கொண்டாளோ இரண்டையும் கூட்டி தான் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த டாஸ்கில் பாலாஜி அணி ஒட்டுமொத்தமாக மூன்று மணி நேரம் நான்கு நிமிடம் எடுத்துக்கொண்டு கடைசி இடத்திற்கு வந்துள்ளது, அதனால் பிக்பாஸ் பாலாஜி அணியிலிருந்து யாராவது இரண்டு பேரும் ஜெயிலுக்கு போக வேண்டும் என அறிவிக்கிறார்.

அதனால் சக போட்டியாளர்கள் பாலாஜி மற்றும் சுசித்ராவை  ஜெயிலுக்கு அனுப்ப முடிவு எடுத்து ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். பாலாஜி ஜெயிலுக்கு போவதால் ஷிவானி குட்டி போட்ட பூனை போல் சுற்றி சுற்றி வருகிறார்.

இது அந்த புரோமோ விடியோ