இந்த வார தலைவர் இவரா.? அப்போ பிக்பாஸ் வீடு ரணகளம் தான்.! தரமான சம்பவம் இருக்கு மிரட்டும் ப்ரோமோ

0

விஜய் தொலைகாட்சியில் பிக் பாஸ் 4வது  சீசன் முதல் வார முடிவில் யார் கேப்டன் என்ற முடிவு வரும் கமல் ஹாசன் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ச்களை சந்தித்து தேர்ந்தெடுத்தார்.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி, ஞாயிறு என்றாலே கமல், போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்த வாரத்தின் மூன்றாவது புரோமோ வில் யார் இந்த வார கேப்டன் என்று ஒரு ஜனநாயக முறைகளை தேர்ந்தெடுத்தார். அதில் சிவானி மற்றும் சுரேஷ் சக்கரத்திற்கு ஜனநாயக முறைப்படிஓட்டு போட்டனர்.

அதில் ஷிவானிக்கு 3 பேர் மட்டுமே கை தூக்கிய நிலையில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு சோமு சம்யுக்தா, பாலாஜி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, கேப்ரில்லா, ரியோ போன்றவர்கள் கைதூக்கி ஆதரவை காட்டுகின்றனர்.

இதற்கு கமல் ஓட்டு போடுவதற்கு முன் நன்றாக யோசித்து போடுங்க, என்று சொல்ல, டபுள் மீனிங் ஆக பேசுறேன் என்று நினைக்காதீர்கள் என்று நக்கலாக பேசியுள்ளார்.