பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பிக்பாஸ் அல்டிமேட்டில் இணைய உள்ள டாப் நடிகை.! அட, இவர் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாச்சே.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஏராளமானவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஐந்தாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு முடிந்த நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளின்படி 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் வகைகள் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் ஐந்து சீசன்களில்  கலந்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறாத போட்டியாளர்களை வைத்துதான் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருமே சினிமாவில் பெரிதாக சாதிக்க முடியாத காரணத்தினால் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். எனவே இவர்களைத் தொடர்ந்து மீண்டும் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் சாதிக்க முடியாத காரணத்தினால் ஒரு நடிகை வர உள்ளார்.

அந்த நடிகை வேறுயாருமில்லை ரசிகர்களின் பேவரைட் நடிகையான ரம்யா பாண்டியன் தான். தனது கவர்ச்சியான புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டார் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு மவுசு உருவானது இவர் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் விஷ பாட்டில் என்று அனைவராலும் கலாய்க்கப்பட்டார்.

இவர் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பெரிதாக அது பாராட்டக் கூடிய படமாக அமையவில்லை இதன் காரணமாகத் தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமடையவில்லை என்றாலும் இவரின் புகைப்படங்களால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே நடிகை லாஸ்லியா தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக வெளிவந்த ப்ரோமோவில் ரம்யா பாண்டியன் வர இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment