அடேங்கப்பா ஆண்டவருக்காக கொட்டி கொடுத்த பிக்பாஸ்.. கிறுகிறுக்க வைக்கும் உலகநாயகனின் சம்பளம்

Vijay tv : விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தன்னுடைய 7 வது சீசனை ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோ அடுத்தடுத்து வெளிவரும் நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதில் சர்ச்சை பிரபலங்களான ரேகா நாயர், பப்லு பிரித்திவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பது நிகழ்ச்சி மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக உலக நாயகன் வாங்கி இருக்கும் சம்பளம் பற்றிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் இந்த முறை 2 வீடுகள், 20 போட்டியாளர்கள் என்ற புதிய முறையை கொண்டு வந்தது போல் ஆண்டவரின் சம்பளத்தையும் இருமடங்காக உயர்த்தி இருக்கிறார் பிக்பாஸ். அதாவது இதுவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமலுக்கு 75 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை 130 கோடி சம்பளம் அவருக்கு பேசப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தான் இப்போது மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆண்டவர் மொத்தமாக வாங்கி விட்டாரே என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

இப்படி ஆரம்பத்திலேயே களை கட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே காத்திருக்கும் பிக்பாஸ் வெறியர்கள் போட்டியாளர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.