கேப்டன் விஜய்யை கவர்ந்து இழுக்காத ஆறு பேருக்கு பிக் பாஸ் போட்ட கண்டிஷன்.! அரண்டு போன போட்டியாளர்கள்.

Bigg Boss tamil season 7 : விஜய் தொலைக்காட்சியில் நேற்று மதியம் அக்டோபர் இரண்டாம் தேதி 6 மணிக்கு பிக் பாஸ் மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

விஜய், அனன்யா, பாவா செல்லத்துரை, விசித்ரா, யோகேந்திரன் வாசுதேவன், பாக்கியலட்சுமி சரவணா, விக்ரம் படம் நடிகை மாயா கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஐசு, வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார், லவ் டுடே அக்ஷயா உதயகுமார், டான்ஸ் மாஸ்டர் மணிசந்திரா, வினுஷா தேவி, நிக்சன், பிரதீப் ஆண்டனி, ரவீனா தகா, பூர்ணிமா ரவி, கூல் சுரேஷ் என 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

மேலும் நேற்று கிராண்ட் ஓப்பனிங் என்பதால் போட்டியாளர்கள் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்ற காரணத்தை கூறி தொடங்கினார்கள். இந்த நிலையில் இன்று போட்டியாளர்களை பிக் பாஸ் மிரட்டும் வகையில் புதிய புதிய ரூல்ஸ் கூறுகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள் ஏனென்றால் அந்த புரோமோ வீடியோவில். இந்த பிக் பாஸில் கேப்டனான விஜய்யை குறைவாக கவர்ந்திழுத்த நிக்சன், பவா செல்லத்துரை, அனன்யா, வினுஷா, ரவீனா, ஐஸ்வர்யா இந்த ஆறு பேரும் இரண்டாவது பாதை வழியாக இன்னொரு வீட்டிற்கு செல்ல வேண்டுமென பிக் பாஸ் சொல்லுகிறார் திரும்ப நீங்க இந்த வீட்டுக்கு எப்ப வரீங்களோ அப்பதான் உங்ககிட்ட நான் பேசுவேன் என கூறுகிறார்கள்.

அதேபோல் இந்த வீட்டில் இருக்கும் ஆறு பேரும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே போகக்கூடாது என கெடுபுடியான ரூல்ஸை பிக் பாஸ்க்கு கூறியுள்ளார் இதனால் போட்டியாளர்கள் திக்குமுக்காடி நிற்கிறார்கள் 6 பேரும் ஒரே வீட்டில் மற்ற வீட்டில் இருப்பவர்களிடம் பேச கூட முடியாது அதனால் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.