வனிதா மகளிடம் வாங்கி கட்டிக் கொண்ட விசித்ராவின் மூன்று மகன்களை பார்த்து உள்ளீர்களா.! வைரலாகும் குடும்ப புகைப்படம்

bigg boss tamil season 7 contestant vichithra family photos : கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக துவங்கி இருக்கும் நிலையில் 18 போட்டியாளர்களுடன்  கலைக்கட்டி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் முதல் எவிக்ஷன் நடைபெற்று முதல் ஆளாக மாடல் அழகி அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவரை அடுத்து இன்று பவா செல்லத்துரை உடல்நிலை பிரச்சினையினால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏராளமான சண்டை சச்சரவுகள் இருந்து வருகிறது.

அப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய குரல் பிக்பாஸ் வீட்டில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு பிரச்சனைகள் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் விசித்ரா, ஜோவிகாவிற்கு இடையேயான பிரச்சனைக்கு நேற்று கமலஹாசன் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்.

இவ்வாறு திரைவுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை விசித்ரா இவர் குடும்ப சூழ்நிலையினால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவருடைய உடலமைப்பை வைத்து பெரும்பாலும் ஐட்டம் கதாபாத்திரத்தில் தான் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

bigg boss tamil season 7 contestant vichithra son photos
vichithra

எனவே தொடர்ந்து கவர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த விசித்ரா பிறகு திருமணம் செய்துக் கொண்ட செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வரும் நிலையில் முதல் வாரத்திலேயே சில பிரச்சனைகளில் சிக்கிவுள்ளார்.

bigg boss tamil season 7 contestant vichithra family photos
vichithra

அனன்யாவின் டாட்டூவை காமிக்க சொன்னது, ஜோவிகாவின் படிப்பு குறித்து பேசியது போன்றவற்றால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை விசித்ரா தனது கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் எடுத்துக் கொண்டு அழகிய குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.