கமல் சார் நீங்க பயங்கரமான ஆளு தான்.. இங்கேயும் கூட்டிட்டு வந்துட்டீங்க.. பிக் பாஸ் 7-ல் என்ட்ரி கொடுத்த விக்ரம் பட நடிகை.!

Bigg boss 7 tamil season : பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1ஆம் தேதி இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதேபோல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மாயா கிருஷ்ணன்.

இவர் தமிழ் சினிமாவில் வானவில் வாழ்க்கை, 2.0, மகளிர் மட்டும், தொடரி வேலைக்காரன், விக்ரம், என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் மிரட்டலாக வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்து மிரட்டி இருந்தார்.

விக்ரம் திரைப்படத்தில் ஆ ஹீம்.. எனக்கத்தியே ஒட்டுமொத்த இளைஞர்களையும் திக்கு முக்காட வைத்தார் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 12வது போட்டியாளராக நுழைந்துள்ளார். மேலும் இவரின் சொந்த ஊர் மதுரை தான் சிறுவயதில் இருந்து சினிமாவில் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என ஆர்வத்தில் சென்னைக்கு வந்தவர்..

பட வாய்ப்பு கிடைக்காததால் தெரு தெருவாக அலைந்து திரிகிறேன் ஆனாலும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறினார் மேலும் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னுடைய நண்பர்கள் பலரும் கமல் சார் என்ன பரிசு கொடுத்தார் என கேட்டார்கள் அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் விலைமதிப்பில்லாத நேரத்தை கமல் சார் எனக்காக கொடுத்து இருக்கிறார்.

படத்தில் உங்களிடம் பேசும் வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை ஆனால் இந்த மூன்று மாதம் உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன் என பேசினார் மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு விக்ரம் திரைப்படத்திற்கு முன்பு எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என அவர் கூறியிருந்தார்.