பிக் பாஸ் 7 – ல் கலந்துகொண்ட அக்ஷயா உதயகுமார் யார்.! அட இந்த மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்தவரா இவர்.!

Bigg boss tamil 7 season : பிக் பாஸ் ஏழு சீசன் இன்று மாலை ஆறு மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது இதில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் களமிறங்கினார் அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நான் வருவதற்கு காரணம் சிம்பு மற்றும் சந்தானம் ரசிகர்கள் தான். அவர்கள் தான் என்னை வளர்த்து விட்டது என்பது போல் கூறுகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷ் கேப்டனாக பதவியேற்றார் இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்த பூர்ணிமா ரவி ஒரு youtube பிரபலம் அதேபோல் மூன்றாவதாக ரவீனா தகா போட்டியாளராக களமிறங்கினார், இவர் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவரை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக பிரதீப் ஆண்டனி போட்டியாளராக களம் இறங்கினார் இவர் அருவி மற்றும் டாடா திரைப்படத்தில் நடித்தவர். இவரை தொடர்ந்து நக்சன் களமிறங்கினார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நக்ஷனை பார்த்து பிரதீப் ஆண்டனி நீ ரொம்ப பயப்படுற என முதல் நாளே மூக்கை உடைத்து விட்டார். இவரை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வினுஷா தேவி போட்டியாளராக உள்ளே சென்றார் அது மட்டும் இல்லாமல் மணிச்சந்திரா போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார் இவரை தொடர்ந்து எட்டாவது போட்டியாளராக அக்ஷயா உதயகுமார் களமிறங்கினார்.

இந்த அக்ஷயா உதயகுமார் யார் என தற்பொழுது தெரியவந்துள்ளது 2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் லவ் டுடே இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு இவ்வானா ஜோடியாக நடித்திருந்தார் இவானாவின் சிஸ்டராக நடித்தவர் தான் அக்ஷயா உதயகுமார் இவர் அந்த திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதாவது நிகிதாவின் தங்கையாக லவ் டுடே திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.