பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா.! இதோ முழு விவரம்

0
bigg-boss-tamil-3
bigg-boss-tamil-3

பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலங்களின் சம்பள விவரங்கள் தற்போது கசிந்துள்ளது

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வாரங்களை கடந்துவிட்டது, இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்தவரை பல பிரச்சனைகள் நடைபெற்றது ஆனால் தற்போது காதல் காட்சிகளாக போய்க்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சம்பளங்கள் வழங்கப்படுகின்றது, ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களின் புகழுக்கு ஏற்றவாறு சம்பளங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரங்களை பார்க்கலாம்.

சேரன் பிக் பாஸ் சீசன் திரையில் கலந்துகொள்ள மொத்தமாக ஐம்பது லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார், அதேபோல் அபிராமி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார், சாக்ஷி அகர்வால் 25 ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளமாக பெறுகிறார், அதேபோல் ரேஷ்மா ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் சம்பளமாகவும் மதுமிதா 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாகவும், மேலும் மோகன் வைத்தி, சாண்டி, கவின், சரவணன், ஆகியோர்கள் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள்.

அதேபோல் மீரா மிதுன் 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார், ஷெரின்னும் 15 ஆயிரம் ரூபாய்தான், மேலும் முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மொத்தமாக ஐந்து லட்சம் சம்பளமாக வாங்குகிறார்கள்.