சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படத்தின் நடிகருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான சீரியல் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.
பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் சோசியல் மீடியாவிலும் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவருக்கு குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே அடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விக்ரம் படத்தின் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதாவது சமீபத்தில் ஜிவி 2 என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தினை ஜெகதீசன் என்பவர் இயக்க நடிகர் வெற்றி கதாநாயகராக நடித்திருந்தார். மேலும் ஏற்கனவே ஜெகதீசன் ஏற்கனவே பக்ரீத், இரவு ஆகிய சில திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
வெற்றி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சிவானி நாராயணன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் மேலும் இவர்களை தொடர்ந்து முக்கிய கேரக்டரில் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.

இந்த படத்தில் வெற்றி ஒரு வீடியோ கேம் டிசைனராக நடிக்க இருப்பதாகவும் கற்பனை மூலம் உருவாக்கிய கேரக்டர் நிஜமாகவே பேயாக தோன்றியதால் ஏற்படும் திகில் அனுபவங்களும் வைத்து தான் இந்த திரைப்படத்தின் கதை அமைய இருக்கிறதா ஒரே இரவில் நடைபெறும் கதைய அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இவர்களை தொடர்ந்து பிசாசு படத்திற்கு இசையமைத்திருந்த அரோல் கரோலி இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றார்.