பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வந்தார்கள். அந்த வகையில் ஒருவர் தான் ஷெரின்.
இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் நடித்து வந்தார். பிறகு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சில படங்களில் கவர்ச்சி நடிகையாக சின்ன ரோலில் நடித்து வந்தார்.
சில நாட்கள் கழித்து கிடைத்த சில வாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் சினிமா விட்டு விலகி தனது சொந்த வாழ்க்கையை கவனித்து வந்தார். பிறகுதான் பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.இவரின் உடல் எடையையும், முகத்தையும் பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தார்கள். எனவே ஷெரின் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி தனது அழகிய புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஷெரின் மணப்பெண் கோலத்தில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் விளையாட்டுக்காக பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே என்று கமெண்ட் செய்திருந்தார். இதனை மீண்டும் ஷெரின் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்.
