மிக பிரமாண்டமாக வெளியாகிய பிக் பாஸ் சீசன் 9 தேதி அறிவிப்பு.? இந்த வாட்டி என்ன சம்பவம் செய்ய காத்திருக்கிறார்களோ.?

bigg boss
bigg boss

விஜய் டிவியில் மிகப் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் சோ என்றால் அது பிக் பாஸ் சீசன் தான். இந்த பிக் பாஸ் ஒவ்வொரு சீசன்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 8ல் முத்துக்குமரன் அவர்கள் முதல் பரிசை தட்டி சென்றார்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 9 தொடங்க உள்ளதாக தற்போது அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7 வரையிலும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது கடந்த 8வது சீசனில் இருந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் 9 சீசன் மிகப் பிரமாண்டமான முறையில் தொடங்க உள்ளதாகவும் இதனை நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்குகிறார் என்றும் தற்போது ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகும் என தற்போது ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது அது மட்டுமல்லாமல் இந்த பிக் பாஸ் சீசன் 9 ஜியோ சினிமாஸ் மற்றும் விஜய் டிவியில் 24/7 நேரலையாகவும் பார்க்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

bigg