வீடு ரெண்டு வைல்ட் கார்டு 5.. புரியாத புதிராக பேசும் கமல்.. பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss season 7 wild Card Entry: பிக் பாஸ் சீசன் 7 மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் 3 போட்டியாளர்கள் வெளியேறி 15 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஸ்மால் பாஸ், பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கிடையே பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் மேலும் சுவாரசியமாக்க வைல்ட் கார்டில் ஐந்து போட்டியாளர்களை களமிறக்க இருப்பதாக கமலஹாசன் கூறும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த 6 சீசன்களிலும் வைல்ட் கார்டில் ஒரு நபர் என்ட்ரி கொடுப்பது வழக்கம் ஆனால் தற்பொழுது இரண்டு வீடு என்பதால் ஐந்து பேரை அறிமுகப்படுத்த இருக்கின்றனர். சுவாரசியம் மிகவும் குறைவாக இருப்பவர்கள் எனக்கூறி ஸ்மால் பாக்ஸ் வீட்டில் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்பவர்களுக்கு தண்டனையாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அந்த வாரம் முழுவதும் இவர்கள்தான் சமைத்து தர வேண்டும் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இருக்கும் 15 போட்டியாளர்களும் மிகவும் ஸ்போடிவ்வாக விளையாடி  வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறியதால் இரண்டாவது வாரம் நோ எவிக்ஷன் என்று  அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வாரத்தின் இறுதியான  ஞாயிறு கிழமை நேற்று விஜய் வர்மா வெளியேறியுள்ளார். இவ்வாறு தற்பொழுது 15 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமல்ஹாசன் வீட்ல ஹவுஸ் மேட்ஸ்கள் 15 பேரும் நல்லா செட்டில் ஆகி ஒரு பேட்டன்ல விளையாட்டு கிட்டு இருக்காங்க முன்னாடி எல்லாம் இந்த மாதிரி பேட்டர்ன் ஃபாம் ஆகும் பொழுது ஒரு வைல்ட் கார்டு உள்ள போவாங்க மாறுதல் ஏற்படும் வீடே ரெண்டு அப்பனா வைல்ட் கார்டு எத்தனை 5 பேரு இவங்க ஆட்டத்தையும் புரிஞ்சுகிட்டு உங்கள் கருத்தையும் தெரிஞ்சுகிட்டு உள்ள போறாங்க ஆட்டம் எப்படி மாறப்போகுது அக்டோபர் 29 இரவு 8 மணிக்கு என கூறியுள்ளார்.