இந்த வாரம் வெளியேறும் 2 பேர்.. வைல்ட் கார்டு என்ட்ரியினால் பிக் பாஸ் அதிரடி.. காதல் ஜோடிக்கு வைத்த ஆப்பு.!

Bigg Boss season 7 Voting List: இந்த மாதம் 1ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. 3 வாரங்களை கடந்து இருக்கும் இந்நிகழ்ச்சியில் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா ஆகியோர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் இதனை அடுத்து தற்பொழுது நான்காவது வாரத்திற்கான ஓட்டிங் நடைபெற்று வருகிறது.

எனவே இந்த வாரத்தின் இறுதியில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பது குறித்து ஓட்டிங் லிஸ்ட் கிடைத்துள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் அக்ஷயா, விக்ரம், வினுஷா, யுகேந்திரன், விஷ்ணு, கூல் சுரேஷ், மாயா, ஜோதிகா, மணிச்சந்திரா என 11 போட்டியாளர்கள் சிக்கி இருக்கின்றனர். இவர்களில் வழக்கம் போல ஓட்டிங் லிஸ்ட் பிரதீப் 34.17 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்‌ஷத்ராவின் திருமண புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.!

இவரை அடுத்து இந்த வாரத்தில் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் நிக்சன் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டாலும் 12.64 சதவீதத்துடன் அதிக ஓட்டுகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் மணிச்சந்திரா தற்போது தான் தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார் எனவே 8.59 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Bigg Boss season 7 Voting List

தன்னால் முடிந்த அளவுக்கு டஃப் கொடுத்து வரும் ஜோவிகா 7.97 சதவீதத்துடன் நான்காவது இடத்தையும், 7.12 சதவீதத்துடன் கூல் சுரேஷ் அடுத்த இடத்தினை பிடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து மாயா, விஷ்ணு, யுகேந்திரன், வினுஷா போன்றவர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

நம்பர் 1 நான் தான் என நிரூபித்த விஜய்.. இரண்டாவது இடத்தில் ரஜினி.. மூன்றாவது இடத்தில் யார் தெரியுமா.?

கடந்த வாரம் வீட்டிற்கு போக வேண்டும் என ட்ராமா போட்ட வினுஷா தான் குறைவான வாக்குகளை பெற்று ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தை பிடித்தார் எனவே இவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வினுஷா ஓட்டிங் லிஸ்டில் முன்னேறி இருக்கும் இடத்தில் விக்ரம், அக்ஷயா அடுத்தடுத்த இடங்களைப் பற்றி உள்ளனர்.

Bigg Boss season 7 Voting List

மேலும் 5  வைல்ட் கார்டு என்ட்ரி என்பதால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி சரவணன் விக்ரம் மற்றும் அக்ஷயா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version