நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. வாடா போடா என பேசியதற்கு ஜோவிகாவை விலாசி விஷ்ணு

Bigg Boss season 7 promo: தொடர்ந்து வனிதாவின் மகள் ஜோவிகா சக போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுக்காமல் வாடா போடா, வா போ என பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி சில தினங்களுக்கு முன்பு சக போட்டியாளரான விஷ்ணு விஜயை மரியாதை இல்லாமல் வாடா போடா என்று பேசியதை பார்த்தோம். இதற்கு தற்பொழுது ஜோவிகாவிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் விஷ்ணு.

வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றுள்ளார். இவர் முதல் வாரத்தில் விசித்ராவுடன் ஏற்பட்ட விவாதத்தில் அனைவரையும் இவருடைய பேச்சி வியக்க வைத்தது. எனவே இந்த சீசனின் டஃப்பான போட்டியாளர் ரசிகர்கள் ஜோதிகாவை கருதி வரும் நிலையில் அதே நேரத்தில் சக போட்டியாளர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பட்டம் கொடுக்க சொன்னார். அதில் விஷ்ணு ஜோவிகாவுக்கு சுய புத்தி இல்லாதவர் என பட்டம் கொடுத்தார் இதனை அடுத்து கமல் ஹாசன் ப்ரேக்கென கூறிவிட்டு செல்ல இந்த நேரத்தில் ஜோவிகாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஷ்ணு.

அதாவது, ஜோவிகா சுயபுத்தி இல்லாதவர்னா என்னனு அர்த்தமே தெரியாம என்னை போய் சொல்கிறான் என விஷ்ணுவைப் பார்த்து சொல்ல உடனே கடுப்பான விஷ்ணு உனக்கு பேசவே தெரியாது நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா போடா வாடான்னு கூப்பிடுற நான் என்ன உன்னை வாடி போடி தான் சொல்றேனா என விஷ்ணு கேள்வி கேட்க ஜோவிகா மன்னிப்பு கேட்கிறார்.

மேலும் விஷ்ணு இங்க இருக்கிற எல்லாரும் உனக்கு இளக்காரமா தான் இருக்கு உன்கிட்ட யாரும் எல்லை மீறி பேசக்கூடாது ஆனா நீ மட்டும் எல்லார்கிட்டயும் பேசுவ ஒருத்தரிடம் எப்படி பேசணும்னு தெரிஞ்சுகிட்டு பேசு எல்லாரும் உங்க வீட்டில வேலை செய்றவங்க கிடையாது என கூறுகிறார் இவ்வாறு பேச ஜோவிகா பதில் சொல்ல முடியாமல் திணறும் காட்சி இடம் பெற்றுள்ளது.