ரவீனாவை பங்கம் செய்த மாயா.. கை தட்டிய மக்கள்.! எச்சரித்த ஆண்டவர்

Bigg Boss season 7 today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பல சுவாரசியங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் விதிமுறைகளை மீறினால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கமல்ஹாசன் எச்சரித்துள்ளார் அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. வாரம் தோறும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி, ஞாயிறு எபிசோடுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

ரசிகர்கள் கேட்க நினைக்கும் அனைத்து கேள்விகளையும் கமல்ஹாசன் முன்வைத்து பிக் பாஸ் போட்டியாளர்களை விளாசி வருகிறார். மறுபுறம் இந்த வாரம் ஐந்து பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமாக இருக்கின்றனர். எனவே பிக் பாஸ் போட்டியாளர்களில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்றிருக்கும் இரண்டு பேர் வெளியேற இருக்கிறார்கள்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான டாஸ்க்கள் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்கள்  டாஸ்க்கில் சரியாக விளையாட காரணத்தினால் அவர்களுக்கு சுவையான உணவு தரப்படாது என கூறினார்கள். எனவே பிக் பாஸ் வீட்டில் இருந்த மாயா, ரவீனா, கூல் சுரேஷ் மூன்று பேரும் ஸ்மால் பாஸ்ட் வீட்டிற்கு சென்று சாப்பிட முயற்சி செய்ய இந்த நேரத்தில் கேஸ் தடை செய்யப்பட்டது.

எனவே ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருந்த பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். இவ்வாறு மாறி மாறி விதி மீறல்கள் நடந்ததால் ஒரு கட்டத்தில் கேப்டன் பூர்ணிமா இவர்களிடம் பேசி மீண்டும் ரவீனாவை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்தார். அதன் பிறகு தான் தடை செய்யப்பட்டு இருந்த கேஸ் தரப்பட்டது.

இவ்வாறு விதி மீறல்கள் நடந்ததால் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார். அது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது, கமல்ஹாசன் எதற்காக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றீர்கள் என கேட்க கூல் சுரேஷ் உடம்பு சரியில்லை சார் அதனாலதான் என கூறுகிறார். அப்ப ரொம்ப முடியலனா இங்க வந்துடுவீங்க எனக் கமல் கூற அனைவரும் சிரிக்கின்றனர்.

ரவீனா ஏன் வரல என்று கமல் கேட்க அதற்கு மாயா ஏன்னா அவங்க சாப்பாட்டுக்காக போகல சார் எனக் கூற மக்களும் கைத்தட்டி சிரிக்கின்றனர். பிறகு கமல்ஹாசன் விதிமுறைகளை பிரேக் பண்ணிக்கிட்டே இருக்க கூடாது அதற்கான எச்சரிக்கை தான் இது இல்லையென்றால் கரண்ட் கூட கட் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.