5 வைல்ட் கார்டு என்ட்ரினா.. 2 எவிக்ஷன்.! எதிர்பாராததை எதிர்பாருங்கள் ஆண்டவர் அதிரடி

Bigg Boss season 7 today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது 5 வைல்ட் கார்டு என்ட்ரி என்பதால் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக ஆண்டவர் கூறியிருக்கும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது வரையிலும் மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். இதனை அடுத்து 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் கடுமையான டாஸ்க்களும் நடைபெற்று வருகிறது.

கடல் கடந்து சாதனை படைத்த லியோ.! அமெரிக்காவில் ஆதிக்கம் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

அப்படி இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, பிரதீப், விஷ்ணு,  யுகேந்திரன், வினுஷா, ஐஷு, சரவணன் விக்ரம், அக்ஷயா, மாயா நிக்சன், மணிச்சந்திரா, ஜோவிகா, உள்ளிட்ட 11 போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அப்படி சமீபத்தில் வெளியாக இருக்கும் ஓட்டிங் லிஸ்ட்ல் அக்ஷயா, விக்ரம் இவர்கள் இருவரும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வைல்ட் கார்டு என்ட்ரி ஐந்து பேருனா எலிமினேஷன் இரண்டு பேரு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என ஆண்டவர் கூறியுள்ளார். மேலும் வைல்ட் கார்டு என்ட்ரியில் 2 பெண் போட்டியாளர்கள், 3 ஆண் போட்டியாளர்கள் என்பதும் அந்த ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

தன்னுடைய மகள் பிறந்த நாளை பண்டிகை போல் கொண்டாடிய அசின்.! வைரலாகும் புகைப்படங்கள்.

அதன்படி கானா பாலா, விஜே அர்ச்சனா, ரக்ஷிதாவின் கணவரும் சீரியல் நடிகருமான தினேஷ், மேடைப்பேச்சாளர் பாரதி, ஆர்.ஜே பிராவோ உள்ளிட்ட ஐந்து பேரும் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பல சஸ்பென்ஸ்கள் இருந்து வரும் நிலையில் இது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version