Bigg Boss 7 wild Card Entry: இரண்டு வீடு என்பதால் 5 வைல்ட் கார்டு என்ட்ரி..! புரியாத புதிராக பேசும் கமல்..

Bigg Boss 7 wild Card Entry: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களில் சமீபத்தில் தொடங்கி இருக்கும் 7வது சீசன் தான் அதிரடியான மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பமே அமர்க்களமாக இருப்பது போல் நாள்தோறும் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சுவாரஸ்யமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை யார் இதுவரையிலும் ஜெயிக்கப் போகிறார் என்பதை கணிக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கான யுத்தியை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் நிறைய கண்டெண்டுகளும் கிடைத்து வருகிறது. மேலும் பிக் பாஸ் போட்டியாளர்களும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றை செய்து விட்டு நாங்கள் இதனை கண்டெண்டுக்காக தான் செய்கிறோம் எனவும் கூறி வருகின்றனர்.

கவின் நடித்த டாடா திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிக்பாஸ் பிரபலமா.? வெளிவந்த அதர்ச்சி தகவல்

அந்த வகையில் பிரதீப், மாயா, விஷ்ணு, ஜோவிகா மற்றும் நிக்சன் இவர்கள்தான் டாப் 5 என்று தோராயமாக கணிக்கப்படுகிறது. இவ்வாறு 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் மூவர் வெளியேறி 15 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமல் ஹாசன் இரண்டு வீடு எனவே 5 வைல்ட் கார்டு என்ட்ரி கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர்கள் யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

நவராத்திரி ஸ்பெஷலாக ஜாக்கெட் அணியாமல் புடவையில் தாறுமாறாக போட்டோ ஷூட் நடத்திய விஜே அஞ்சனா.. வைரல் புகைப்படம்

அதாவது விஜே அர்ச்சனா, பப்லு, கானா பாலா, உமாரியாஸ் மற்றும் ரேகா நாயர் ஆகியோர்கள் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்களாம். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகின்ற 29ஆம் தேதி வைல்ட் கார்டில் இந்த ஐந்து பேரும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version