Bully gang – யை வச்சு செய்யும் விசித்ரா.! ரெக்கார்ட் நிறைய இருக்கு குறும்படம் போட்டு காட்டிய கமல்..

Bigg Boss season 7 Tamil today promo 3: கடந்த வாரம் பிரதீப்பை ரெக்கார்டு கொடுத்து பிளான் பண்ணி தூக்கிய மாயா பூர்ணிமாவின் தீமை எதிர்த்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்பொழுது ரசிகர்களின் ஆதங்கத்தை கமலஹாசன் தீர்த்து வைத்துள்ளார் அதற்கான ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அப்படி முதல் ப்ரோமோவில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது உலக நியதி என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். எனவே கண்டிப்பாக இந்த முறை ஏஜென்டீம்க்கு சரியான பதிலடி உள்ளது என எதிர்பார்க்கப்பட்டது.

உங்களுக்கு என்ன மாலைக்கண்ணா? சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீமை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்… அரங்கையே அதிர வைக்கும் ரசிகர்களின் ஓசை

அதேபோல் இரண்டாவது ப்ரோமோவில் ரெட் கார்டு மஞ்சளா தெரிஞ்சதா அப்ப நா மாலை கண்ணா உங்களுக்கு உங்க விளையாட்டுல என்னையும் பிளேயரா சேத்துக்கிட்டீங்க என மாயாவின் ஏஜென்ட் டீமை வெளுத்து வாங்கினார். இவ்வாறு தொடர்ந்து ரசிகர்களின் மனதில் இருக்கும் அனைத்து கேள்விகளையும் கமல் டிக்கெட் வந்தார்.

இதனை அடுத்து இந்த வார கேப்டனாக இருந்த மாயா தொடர்ந்து ஸ்மால் பாக்ஸ் வீட்டிலிருந்து விசித்ரா அர்ச்சனா தினேஷை மிகவும் கடுமையாக சண்டை போட்டு வந்தார். மக்களுக்கு கொஞ்சம் கூட குறைவு இல்லாமல் இருந்து வந்தது எனவே இதை நான் இந்த முறை நிறைய தவறு செய்திருக்கும் கமல் சார் கண்டிப்பாக கேட்பார் வழக்கம் போல சாரி கேட்டு விட்டாய் எல்லாம் சரியாயிடும் என பூர்ணிமா மாயா பேசிக் கொண்டனர்.

லியோ படத்தில் என்னுடைய ஃபேவரைட் சீன்.. இயக்குனர் அட்லீ பேச்சு.!

இந்நிலையில் அர்ச்சனா விசித்ராவுக்கு நியாயம் கேட்கும் விதமாக மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன் விசித்ரா உங்களுக்கு ஏதாச்சம் கம்பளைண்ட் இருக்கா என கேட்க இதற்கு விசித்திரா பிரதீப்பை நீங்க ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிட்டீங்க சார். போன வாரம் ஃபுல்லா எங்களுக்கு அந்த மாதிரி பிரச்சனை இருந்துச்சு அப்ப நான் பெண்களை ஃப்ரீயா விட்டுடுவீங்களா சார்? என கேட்க இதற்கு கமல்ஹாசன் இல்ல இல்ல ரெட் கார்டு எங்க நிறைய இருக்கு அதற்கு பஞ்சமே இல்லை எனக் கூறுகிறார் பிறகு என்ன மரியாதை இல்லாம நடத்துனதுக்கு எந்த சாரியுமே இல்லையா சார் என கேட்க இதற்கு கமல்ஹாசன் அவங்க சாரிய நீங்க நம்புறீங்களா நான் நம்பல ஏன்னு சொல்றேன் என கூறிவிட்ட பிக் பாஸ் படம் போடுமாறு சொல்கிறார் இதனால் ஏஜென்ட் டீம் கதி கலங்கி நிற்கின்றனர்.

Exit mobile version