தவறாக எல்லை மீறி பேசிய பிரதீப்.. துணிமணிகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடும் கூல் சுரேஷ்.! பரபரப்பின் உச்சத்தில் பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss season 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் தொடர்ந்து தவறாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அவரே கட்டுப்படுத்தினாலும் ஒரு கட்டத்தில் அவருடைய பேச்சுகள் மிகவும் முகம் சுளிக்க வைக்கிறது. அப்படி தற்பொழுது நடந்திருக்கும் புதிய டாஸ்க்கில் பிரதீப் ஸ்கூல் சுரேஷை மரியாதை இல்லாமல் பேச உடனே கோபமடைந்த கூல் சுரேஷ் தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு கிளம்புவதாக ஓடுகிறார் அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 5 பேர் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்து இருக்கும் நிலையில் இந்த வார கேப்டன் ஆன பூர்ணிமா 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் விசித்ராவையும் சேர்த்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்தாள் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை பழிவாங்க வேண்டும் என பிளான் போட்டுள்ளார்கள்.

ஆரம்பமே சண்டையில் ஆரம்பித்த பாண்டியன் ஸ்டோர் 2.. மச்சான்களிடம் மல்லுக்கு நிற்கும் பாண்டியன்

மேலும் அவர்கள் பார்க்கும்பொழுது சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் ஆனால் உண்மையாக சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது என கூறியிருக்கும் நிலையில் இவர்களுடைய இந்த பிளான் வொர்க் அவுட் ஆகுமா என இனிவரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த சூழலில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் புதிய டாஸ்க் நடைபெறுகிறது.

அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பெல் பொருத்தப்பட்ட ஹெட் இயர் கொடுக்கப்படும் அதனை தலையில் அணிந்து கொண்டு பெல் ஒலிக்காமல் இருப்பதுதான் டாஸ்க் என்று கூறப்படுகிறது. அப்பொழுது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரதீப் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கிறார் இந்த நேரத்தில் நான் நேர்மையாக விளையாடிக்கிட்டு இருக்கிறேன் என்னை தொந்தரவு செய்யாத வேறு எங்கேயாவது போய் விளையாடு என்று கூல் சுரேஷ் பார்த்து சொல்கிறார்.

என் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தால் எனக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும்.! லியோ குறித்து மனம் திறந்த மடோனா செபஸ்டியன்.

பிறகு டாஸ்க் முடிந்தவுடன் யார் யாரெல்லாம் அவுட் என்று சொல்லுங்க என பிக் பாஸ் கேட்க அதற்கு மாயா ரவீனா என்று கூற கூல் சுரேஷ் பிரதீப் என்று சொல்ல இதற்கு கோபமான பிரதீப் என்னை பத்தி சொல்லாத அவரு மணி மட்டும் ஆட்டிகிட்டு இருக்க சொல்லு என்று சொல்ல அதைக் கேட்டு கோபமான கூல் சுரேஷ் என்னடா என்று வேகமாக கேட்கிறார்.

பிரதீப் அப்படித்தான் பேசுவேன் என்று சொல்ல இதனால் கோபமடைந்த கூல் சுரேஷ் மைக்கை கழட்டி வைத்துவிட்டு வீட்டில் இருக்கும் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போவதாக வேகமாக ஓடுகிறார்.