தம்பியோட இந்த நிலைமைக்கு மாயா கேங்க் தான் காரணமோ ? வைரலாகும் சரவண விக்ரமின் பதிவு.

saravana vickram : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் கண்ணன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சரவண விக்ரம். இவர் அதே சீரியலில் தனக்கு மனைவியாக நடித்த ஐஸ்வர்யா என்கின்ற பெண்ணுடன் இணைந்து யூட்யூபில்  சேனல் ஒன்றை ஆரம்பித்து நிறைய வீடியோ போட்டு பிரபலமானார்.

இதனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் இருந்தனர். அந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7னில் இவரும் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இந்த பிக் பாஸில் கிடைக்கின்ற வாய்ப்பின் மூலம் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெள்ளித்திரையில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க உள்ளதாக கூறியிருந்தார்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும்போது மக்களும் இவர் பெருசா பண்ணுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் இவர் அந்த வீட்டில்  இருந்த இடமே தெரியாமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மேலும் அந்த வீட்டில் இருந்த போட்டியாளர்களும் இவருக்கு செட் பிராப்பர்ட்டி என்ற பட்டமே கொடுத்தனர்.

எப்பொழுதும் மாயா, பூர்ணிமா மற்றும் ஜோவிகா என்ன சொல்கின்றனரோ அதையே இவரும் செய்தார். அதனாலயே மக்களுக்கு இவரை பிடிக்காமல் போனதால் 84 வது நாள் வீட்டை விட்டு வெளியேற்றினர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார் அப்பொழுதும் ஏ டீம் ஆட்களுடனே சேர்ந்து சுத்தினார். இதில் கடுப்பாகி அவரது சொந்த தங்கையே அவரை விமர்சித்தார்.

இதனால் இவர் இணையதளங்களில் ட்ரோலுக்கு ஆளானார். எனவே இதில் கடுப்பான சரவண விக்ரம் ஐ குவிட்  மை பேஷன் என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலர் சரவண விக்ரம் இனிமேல் நடிப்பதிலிருந்து விலக உள்ளாரா என பதிவிட்டு வருகின்றனர். பிறகு சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவையும் டெலிட் செய்துவிட்டாராம். இதோ அந்த பதிவு.

saravana vickram
saravana vickram