ரசிகர்களை கவர்ந்து இழுத்த “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ – நீங்களும் போட்டியாளராக மாற ஒரு அறிய வாய்ப்பு.!

தமிழ் ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஆம் விஜய் டிவியில் சீசன் சீசன் ஆக பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு துறையில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.

பல இளம் நடிகர்கள் மற்றும் முகம் தெரியாத பிரபலங்கள் பிக் பாஸில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து திரைப்பட வாய்ப்புகளையும் அள்ளுகின்றனர். அந்த வகையில் பல பேருக்கு பிக்பாஸ் அடித்தளமாக அமைந்து பல கலைஞர்களை அவர்களது துறையில் முன்னேற்றி உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் ஆறாவது சீசன் கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன. இந்த நிகழ்ச்சியை இதுவரை 5 சீசன்களாக கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது கமலஹாசன் சில திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு கூட கமலின் இந்தியன் 2 படத்தின் பூஜை மீண்டும் தொடங்கப்பட்டது அதனால் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் கமலஹாசன் பிக் பாஸ் ஆறாவது சீசனை தொகுத்து  வழங்குவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் இருந்து பிக் பாஸ் சீசன் 6 காண அதிகாரப்பூர்வமான புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோவில் பிக் பாஸ் ஆறில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் ஏன் நீங்களும் கலந்து கொள்ளலாம் நீங்கள் ஏன் பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வீடியோ ஒன்றை எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் என குறிப்பிட்டுள்ளனர். இதுவரை இல்லாத ஒரு புது விஷயமாக பிக் பாஸ் 6 யில் பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment