பிக்பாஸ் சீசன் 6 : எந்த தேதியில் ஆரம்பிக்குது தெரியுமா.? பிரபல நபர் அறிவிப்பு.!

விஜய் டிவி தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சியை விட சற்று வித்தியாசமானது இந்த தொலைக்காட்சியில் சீரியல்களை விட அதிக ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. இதனால் இல்லத்தரசிகளையும் தாண்டி விஜய் டிவி தொலைக்காட்சி ரசிகர்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். இப்பொழுது கூட ராஜு வீட்ல பாட்டி என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பு வருகிறது.

இந்த நிகழ்ச்சி தற்போது அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ராஜு மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். மதுரை முத்து மற்றும் ராமர் இந்த நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை குதூகலம் அடைய செய்ய இன்னொரு ஷோவையும் தற்பொழுது களம் இறக்க உள்ளது விஜய் டிவி.

அந்த நிகழ்ச்சி வேறு எதுவும் அல்ல பிக் பாஸ் தான் பிக் பாஸ் 5 சீசன் இதுவரை வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆறாவது சீசன் வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன அதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து லோகோ ப்ரோமோ போன்றவையும் வெளிவந்து அசத்துகின்றன.

இதனால் பிக் பாஸ் ஆறாவது சீசனை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர். எப்படி இருக்கின்ற நிலையில் இந்த சீசனில் யார் யார் போட்டியளராக கலந்து கொள்வார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளி வருகின்றன அந்த வகையில் ஜி பி முத்து, திவ்யதர்ஷினி, ரக்சன் மற்றும் ஒரு சில பெயர்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.

இருப்பினும் விஜய் டிவி இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 6 எந்த தேதியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி தான் சீசன் 6 தொடங்கப்பட்டிருப்பதாக பிரபலம் ஒருவர் சொல்லி உள்ளார் இதோ அந்த ட்விட்டர் பதிவு..

Leave a Comment