டிஆர்பி யில் முதலிடத்தை பிடிக்க சின்னத்திரை தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொள்வது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடர்ந்து ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை களம் இறங்கிய வண்ணமே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தனது முக்கியமான பிரம்மாஸ்திரம் என கருதப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் களம் இறங்குகிறது.
ஆம் இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் பிக்பாஸ் ஆறாவது சீசனையும் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி களம் இறக்க இருக்கிறது இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அதிரடியாக போய்க்கொண்டிருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 6 யார் தொகுத்து வழங்க போகிறார்.
யார் யார் போட்டியாளர்கள் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினார் தற்பொழுது அதற்கு பதிலும் கிடைத்துள்ளது. உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார் அதே போல வருகின்ற ஆறாவது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்க இருக்கிறார் இதற்காக அவருக்கு சம்பளமாக சுமார் 75 கோடி பேசப்பட்டு இருக்கிறதாக தகவல்கள் வெளி வருகின்றன.
மற்ற சீசனை போலவே இந்த சீசனையும் கமலஹாசன் அழகாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கிற நிலையில் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது ஆம் மக்கள் பலரும் பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் போட்டியாளர்கள் யார் யார் என கேட்டுக்கொண்டு வந்த நிலையில் அதற்கான அதிகார பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் பிக் பாஸ் வீட்டிற்கு மொத்தம் 19 போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வமாக செல்கிறார்கள் அவர்களின் புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. நடிகை ரக்ஷிதா, மைனா நந்தினி, ஜி பி முத்து மற்றும் பல புது முக போட்டியாளர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் இதோ புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

