பிக்பாஸ் சீசன்4 ல் பாண்டியன் ஸ்டோர் நடிகை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

0

bigg boss season 4 pandiyan store contestant:விஜய் டிவியில் தொடர்ந்து 3 சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் தொடங்கவுள்ளது பிக் பாஸ். விஜய் டிவிக்கு trp ரேட் ஏற்றி தருவது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது தெரிந்த ஒன்றே.

இந்த நிகழ்ச்சி தற்போது மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் டி வி யில் பிக் பாஸ் சீசன் 4 கான இரண்டு புரமோ வீடியோக்கள் வெளிவந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த பிக்பாஸில் கலந்துகொள்ள பலபேர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் இதன் மூலம் நிறைய பட வய்ப்புகள் மற்றும் ரசிகர்கள் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் நடிகர், நடிகைகள் போட்டி போட்டு கொண்டு உள்ளனர். மேலும் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் அதிகம்.

அந்தவகையில் விஜய் டிவியில் பிரபல சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகை சுஜிதா கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி வருகிறது.  ஆனால் அவரோ இதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

மேலும் இதில் அவர் கலந்து கொள்ள போவதில்லை என்றும் அவரின் சகோதரர் மாஸ்டர் சுரேஷ் தான் இந்த பிக்பாஸில் கலந்து கொள்ள போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அது தமிழ் பிக் பாஸ் அல்ல தெலுங்கு பிக்பாஸ் எனவும் அவர் கூறியுள்ளார்.