பிக்பாஸ் ரைசா புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரைசா வில்சன். இவர் 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 ல் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் தனது சிறந்த பங்களிப்பை அளித்து சுமார் 63 நாட்கள் நீடித்தார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிலிருந்து வெளியேறிய ரைசா வில்சன் அவர்களுக்கு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் கைகொடுத்தது. இப்படத்தில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து தற்போது அவர் (FIR) என்ற திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் அவர்கள் இயக்கி வருகிறார்.

இவர் இதற்கு முன்பு கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து அவர் பல படங்கள் தற்போது கையில் வைத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் அவர்கள் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் இடமிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு விதமாக ரைசா வில்சன் அவர்கள் மாஸ்க் அணிந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையான மாஸ்க்கை போட்டு வெளி படுத்தலாமே அறிவுறுத்தி வருகின்றனர்.

அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது காட்டுத் தீ போல பரவி வருகிறது.

raisa
raisa

Leave a Comment