‘முத்தங்கள் மிகவும் முக்கியமானது’ எனக்கூறி முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா.! உருகும் ரசிகர்கள்.

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ரைசா இவர் பிக்பாஸிற்கு பிறகு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர்.

தற்பொழுது இவர் எஃப்ஐஆர் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கி வருகிறார். பிகாஸ் ரைசா இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமா கற்றவர்.

மேலும் இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் உடன் இணைந்து மஞ்சிம மோகன் ரெபா மோனிகா, ஜான், இயக்குனர் கௌதம் மேனன், கௌரவ நாராயணன் ஆகியோர்கள் நடிக்கிறார்கள். அஷ்வத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். எமோஷனல் திரில்லர் உருவாகி வரும் இந்த திரைப் படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ரைசா எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார் அவ்வபொழுது புகைப்படத்தை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ‘முத்தங்கள் மிகவும் முக்கியமானவை’ எனக் கூறி தன்னுடைய செல்லப் பிராணிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.

raisa
raisa

Leave a Comment