முன்னாடி சிக்ஸ்பேக் வைக்கிறது ஓல்டு ஸ்டைல்.! பின்னாடி சிக்ஸ் பேக் வைக்கிறது தான் நியூ ஸ்டைல்.! வைரலாகும் மகத்தின் மரண மாஸ் புகைப்படம்.!

நடிகர் மகத் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் தமிழில் 2011ஆம் ஆண்டு அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது பெற்றார். ஆனால் இதற்கு முன் வல்லவன், காளை ஆகிய திரைப்படத்தில் பெயர் குறிப்பிடாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன்பிறகு தமிழில் 2014ஆம் ஆண்டு விஜய்யுடன் ஜில்லா திரைப்படத்திலும் அதே வருடத்தில் வடகறி திரைப்படத்திலும் நடித்திருந்தார், பின்பு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்பொழுது இவர் உத்தமன் என்ற திரைப்படத்தில் நடிகராக நடித்து வருகிறார்.

மகத் சிம்புவின் நண்பர் ஆவார், இவர் சமீபத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார், சமீபகாலமாக இவர் படத்தில் நடிப்பதற்கு தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் அதே போல் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். அதனால் மகத் ஜிம் பயிற்சி தொடர்ந்து செய்து வருகிறார்.

பெரிய நடிகர்கள் கட்டுமஸ்தான உடலை வைத்து சிக்ஸ் பேக் வைத்திருந்தால் உடனே பேமஸ் ஆகி விடுவார்கள் ஆனால் மகத் 6 பேக் வைத்து இருந்தும் இன்னும் ஃபேமஸ் ஆக முடியவில்லை, இவர் பிக்பாஸில் யாஷிகா உடன் பல சேட்டைகளை செய்துள்ளார்.

இந்தநிலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் மஹத் முதுகில் சிக்ஸ்பேக் வைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

mahat
mahat

Leave a Comment