கவின் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் லாஸ்லியா!

bigg boss Losliya, who has put an end to the rumor about kavin: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸில் கவின் உடன் நெருங்கி பழங்கியதன் மூலம் இவருக்கும் கவினுக்கும் காதல் என்று பேசப்பட்டு வந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு கவின்லியா என்ற ஆர்மி செயல்பட்டு வந்தது.

மேலும் இதை தொடர்ந்து அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பின் திருமணத்தைப் பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை. மேலும் இருவரும் அவர்களின் முன்னேற்றங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் உடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதுபோல கவினும் லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இருவரும் அவர்களின் முன்னேற்றத்தினை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி முன் நின்று செல்பி எடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் ‘செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள் கண்ணாடி முன் நின்று உங்கள் தவறை கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுங்கள்’ என கூறியிருந்தார். இது கவினுக்கான பதிலா என பலரும் கேள்வி எழுப்பினர்.

தற்போது இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘நான் போடும் பதிவுகள் என்னை பற்றியது மட்டுமே. தேவை இல்லாமல் வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம்’ என்ன லாஸ்லியா பதிலளிக்கிறார்.

 

Leave a Comment