பஞ்சுமிட்டாய் உடையில் இஞ்சி இடுப்பை காட்டி ரசிகர்களை மயக்கும் லாஸ்லியா.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .

இந்நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களின் காதல் படத்தில் இருக்கும் காதல் அளவிற்கு இருந்ததால் இவர்களுக்கு என்று தனி ஆர்மி உருவானது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் இறுதி கட்டம் வரை லாஸ்லியா சென்றார்.

இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சிவா ஆகியோருடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து உள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

ரசிகர்களும் இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பிங்க் நிற உடையில் பார்பி டால் போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment