மிகவும் ஃபேமஸான சீரியலின் இரண்டாம் பாகத்தில் லொஸ்லியாக்கு வாய்ப்பு.! இயக்குனர் அதிரடி.!

0
losliya
losliya

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர் என்றால் லாஸ்லியா தான்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவருக்கு எந்த பட வாய்ப்பு எத்தனை பட வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது, இதற்கு முன் இயக்குனர் ரவிக்குமார் லாஸ்லியாவுக்கு  திரையுலகில் நல்ல வரவேற்ப்பு இருப்பதாக  கூறினார்.

இப்படி வெள்ளித்திரையில் வாய்ப்பு இருக்குதோ இல்லையோ என்று தெரியவில்லை ஆனால் சின்னத்திரையில் கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி-சீரியல் இரண்டாம் பாகத்தை சரவணன் மீனாட்சி சீரியல் இயக்கிய பிரவீன் இயக்க இருக்கிறார், இந்த ராஜா ராணி  இரண்டாம் பக்கத்தில் லாஸ்லியா நிச்சயம் நடிப்பார் என கூறியுள்ளார்.