திகிலில் மிரட்டும் லிப்ட் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ.!

0

விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கவின். இந்த சீரியலில் தொடர்ந்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் பிரபலமடைய முடியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஏராளமான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அந்தவகையில் தற்போது ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹெப்ஸி தயாரித்துள்ள த்ரில்லர் திரைப்படமான லிப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா நடித்துள்ளார். இந்த லிப்ட் திரைப்படத்தினை வினித் வரப்பிரசாத் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு கவின் ஆகாஷ்வாணி என்னும் ரொமான்டிக் மற்றும் காதல் நிறைந்த வெப்சீரியலில் நடித்துள்ளார். அதன்பிறகு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் டாக்டர் மற்றும் பிஸ்ட் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்பொழுது கவின் நடிப்பில் வெளிவந்த லிப்ட் திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ.