ஓய்வை அறிவித்து இளசுகளை சோகத்தில் ஆழ்த்திய கவின்!!வைரலாகும் வீடியோ.

0

bigg boss announced retirement:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் கவின்.

இவர் சில சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவனத்தை ஈர்த்தார்.சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3இல் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கவின் 5 கோடி ரூபாய் கொடுத்ததும் எடுத்துக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றுவிட்டார் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவின் நான் ஓய்வு பெறுகிறேன் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஓய்வு பெறுகிறேன் என்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கானார்கள் ஆனால் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறவில்லை பப்ஜி கேமில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.