சன் டிவி கண்ணான கண்ணே சீரியலில் களம் இறங்கிய பிக்பாஸ் நடிகை.!

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.அதோடு மட்டுமல்லாமல் புதுமுக நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சீரியலுக்கு என்றே ஒரு பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. சீரியல்களில் ஒளிபரப்புவதில் நம்பர் ஒன்றாக இருந்து வந்த சன் டிவி திடீரென்று பின்னுக்கு தள்ளப்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட மற்ற தொலைக்காட்சிகள் சன் டிவியை ஓவர்டேக் செய்து மிகவும் பிரபலமாக இருந்து வந்த நிலையில் சமீப காலங்களாக தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது ரோஜா, வானத்தைப் போல, அன்பே வா என இன்னும் சில சீரியல்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மிகவும் சுவாரசியமாகவும் பல திருப்பங்கள் கொண்ட நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில் விரைவில் புதிய நடிகை ஒருவர் என்ட்ரீ தர உள்ளார்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த காஜல் பசுபதி  தான் புதிதாக நடிக்க உள்ளார்.காஜல் பசுபதி தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருவதால் இந்த சீரியலில் இவர் என்ட்ரீ கொடுக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகிறது.

kannana kanne
cckannana kanne

Leave a Comment