ஸ்கூல் குரூப் போட்டோவை வெளியிட்டு இதில் நான் எங்கிருக்கிறேன் கண்டுபிடியுங்கள் எனக்கூறிய பிக்பாஸ் பிரபலம்.!!

Bigg boss kajal pasupathi Published her School group Photo: காஜல் பசுபதி தமிழ் சினிமாவில் டிஷ்யூம், கோ, மௌனகுரு, இரும்பு குதிரை, கதம் கதம், பெருமாள், என்னமோ நடக்குது, அழகு குட்டி செல்லம், சிங்கம், பழைய வண்ணாரப்பேட்டை, கலகலப்பு 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் சன் மியூசிக்கில் இதய திருடன் எனும் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் சாண்டி மாஸ்டரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனைதொடர்ந்து சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தற்போது இவர் தனித்து வாழ்ந்து வருகிறார்.

இதனைதொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு மீண்டும் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் பசுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி பருவத்தில் எடுத்த குரூப் ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த போட்டோவை பதிவிட்டு பத்தாம் வகுப்பு நினைவுகள் இதில், என்னை கண்டுபிடிக்க முடிகிறதா? எப்படி இருக்கேன். என அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த காஜலின் ரசிகர்கள் அவரை சரியாக கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kajal-tamil360newz
kajal-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment