மாலையும் கழுத்துமாக மணப்பெண் கோலத்தில் நிற்கும் பிக்பாஸ் ஜூலி.! வைரலாகும் புகைப்படம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீர தமிழச்சி என்ற பெயரை எடுத்தவர் பிக் பாஸ் ஜூலி அதன் பிறகு இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் எடுத்த பெயரை கெடுத்துக் கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு மோசமான பெயர் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சந்திக்காத பிரச்சனையும் அவமானமும் கிடையாது அந்த அளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார் அது மட்டும் இல்லாமல் இவருக்கு மிகப்பெரிய கெட்ட பெயரும் உருவானது.

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் இதுவரை எதுவும்  வெளியாகவில்லை இந்த நிலையில் சின்னத்திரையில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். மேலும் தற்பொழுது சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகிறார் இந்த நிலையில் பிக் பாஸ் ஜூலி தற்பொழுது தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் திடீரென ஜூலி மாலையும் கழுத்துமாக பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படம் சீரியலுக்காக எடுத்ததா அல்லது நிஜமாலுமே மாலையும் கழுத்துமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் இது சீரியலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என தற்போது தெரியவந்துள்ளது. இந்த சீரியலில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை விரைவில் காணலாம்.

julie latest
julie latest

Leave a Comment