தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம் தான் இந்த போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சி என்று பெயரெடுத்தவர் ஜூலி, ஆனால் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார், பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு இவரின் பெயர் அப்படியே மாறி விட்டது.
பிக்பாஸில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவரை ரசிகர்கள் வெறுக்க தொடங்கினார்கள் இவரைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் சமூகவலைதளத்தில் வறுத்து எடுக்க ஆரம்பித்தார்கள், ஆனால் ஜூலியோ இதைப்பற்றி கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ சினிமா எனவும் பிஸியாக இருந்து வருகிறார்.
மேலும் பிக் பாஸ் ஜூலி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார், இவர் கடைசியாக விமல் நடித்த மன்னர் வகையறா என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் வந்தார், அதுமட்டுமல்லாமல் இவர் கதாநாயகியாக இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை, இப்படியிருக்க அடுத்ததாக பிக்பாஸ் ஐஸ்வர்யா நடிக்க இருக்கும் பப்ஜி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார் ஜூலி.
சமிபத்தில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஜூலியை பார்த்ததும் அந்த கல்லூரியில் இருக்கும் மாணவர்கள் ‘ஓவியா ஓவியா’ என கத்த ஆரம்பித்தார் இதனால் ஆத்திரமடைந்த ஜூலி காட்டமாக பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜூலியை தான் ஒரு பெரிய செலிபிரிட்டி என நினைத்துக் கொண்டு, கூப்பிடும் விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் அவர்கள் அங்கே அவமானப்படுத்தி அனுப்புவது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த கல்லூரி விழாவில் பெரிய பேச்சாளர் போல் பேச ஆரம்பித்தார் ஜூலி ஆனால் மாணவர்கள் அவரை கொஞ்சம் கூட மதிக்காமல் ‘ஓவியா ஓவியா’ என கத்தி ஜூலி இமேஜை டேமேஜ் செய்தார்கள்.
இந்த ஆவணங்களை சமாளிக்க கற்றுக்கொண்ட ஜூலி இது பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என, ஏன் நான் எங்கு சென்றாலும் என்னை அசிங்க படுத்துகிறீர்கள் அப்படி என்ன தவறு செய்தேன், பிக்பாஸ் முடிந்து நீண்ட நாட்களாகியும் என்னை தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வருகிறீர்கள் எனக்கு மன வருத்தத்தை தருகிறது என வருத்தத்துடன் கூறினார்.
இதோ அந்த வீடியோ
— மரிய ஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) September 20, 2019