டிஆர்பிக்காக 19 வயது இளம் நடிகையை மூன்றாவது போட்டியாளராக களம் இறக்கிய பிக்பாஸ் குழு.!

டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் ஏழாவது சீசன் தமிழில் மிகவும் கோளகாலமாக தொடங்கியுள்ளது இதில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் இறங்கியுள்ளார். மேலும் கோல்ட் சுரேஷ் பேசிய பொழுது நான் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே வருவதற்கு காரணம் என்னுடைய நண்பர் சிம்பு மற்றும் சந்தானம் தான் எனக் கூறியிருந்தார்.

சிம்பு மற்றும் சந்தானம் ரசிகர்கள் தான் என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்தது எனவும் கூறினார். இரண்டாவது போட்டியாளராக பூர்ணிமா ரவி யூட்யூப் பிரபலம் உள்ளே சென்றார். கூல் சுரேஷ் முதல் போட்டியாளராக இருந்ததும் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்தது ஆனால் உள்ளே வந்த பூர்ணிமா ரவி அவரிடம் பேசி கேப்டன் பதவியை எடுத்துக்கொண்டார.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக நவீன தாஹா வண்ணாரப்பேட்டையில் பாடலுக்கு நடனமாடி உள்ளே வந்துள்ளார் உடனே கமல் உங்களுக்கான அவரின் வீடியோவை ஒளிபரப்புகிறார்கள். வெறும் 19 வயதிலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் ஒரே நடிகை இவர்தான் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவன்த் படிக்கும் பொழுது என்னுடைய அப்பா தவறிவிட்டார் என ரவீனா தகா கூறினார் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து என்னுடைய அம்மாவை மகாராணி போல் பார்த்துக் கொள்வேன் என கூறியுள்ளார். உடனே கமல் அந்த பெட்டிக்குள் ஒரு பொருள் இருக்கும் எடுத்துக் கொண்டு வாருங்கள் என கூறுகிறார் அதில் பட்டர்பிளை ரிங் இருக்கிறது. உடனே நீங்கள் வீட்டில் பட்டர்பிளை மாதிரி சுதந்திரமா இருக்கலாம் என கூறுகிறார் கமல்.

raveena dhaha
raveena dhaha

பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்ற ரவீனா தாஹா கீழே தொட்டு கும்பிட்டு உள்ளே செல்கிறார். உடனே கேப்டன் பதவியை எனக்கு விட்டுக் கொடுங்கள் என பூர்ணிமாவிடம் ரவீனா கேட்கிறார் கூல் சுரேஷ் அவர்களும் பூர்ணிமா விட்டுக் கொடுங்கள் எனக் கூறுகிறார். நான்காவது போட்டியார்களராக  பிரதீப் ஆண்டனி என்ற நடிகர் உள்ளே வருகிறார். இவர் அருவி, டாடா போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

pradeep antony
pradeep antony
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்