பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் லிஸ்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் டிவி!!! இவங்க ரெண்டு பேரை லிஸ்ட்ல பாத்ததும், அதிகரிக்கும் ரசிகர்கள்.

0

biggboss contestant list: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் மூலம் தெரியாத முகங்களையும் மக்கள் மத்தியில் தெரிய வைத்து அவர்களுக்கு வாழ்வில் பல வெற்றிகளையும் இன் நிகழ்ச்சி தந்துள்ளது. அதேபோலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த பல நடிகர், நடிகைகள் மோசமான முகமும் இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் தெரிந்தது.

இந்த நிலையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் கமலஹாசனின் பேச்சுத் திறமையால் இந்நிகழ்ச்சி இன்னும் பிரபலம் அடைந்தது என்று கூறலாம். தற்பொழுதுதான் பிக்பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதை நாம் அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 கொரானா காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே நிகழ்ச்சி நடைபெறும் நாள் தள்ளிக்கொண்டே போய் இருந்தது. அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம் நிகழ்ச்சி கட்டாயமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் தற்போது இணையதளத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, தொகுப்பாளராக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்த மணிமேகலை, தனது கண்களால் இளசுகளை கவர்ந்த அதுல்யா ரவி, 19 வயதிலேயே கிளாமரில் உச்சக்கட்ட கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷிவானி நாராயணன், இடுப்பழகி ரம்யா பாண்டியன், புகழ், அமுதவாணன், ஜெமினி கிரன், சூர்யா தேவி உட்பட இன்னும் இளம் நடிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

ஷிவானி நாராயணன், இடுப்பழகி ரம்யா பாண்டியன், புகழ் இவங்களே போதுமே சும்மா கலைகட்டுமே என்கின்ற ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் இதனை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை எப்பொழுது வேணாலும் சிறு மாற்றங்கள் ஏற்படலாம்.