தளபதி 67 பற்றி பேசிய பிக் பாஸ் பிரபலம் ஜனனி.! மொத்த ரகசியத்தையும் இப்படி சல்லி சல்லியா உடச்சிட்டியேம்மா…

0
thalapathy-67
thalapathy-67

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி என்ற திரைப்படத்தை இயக்கிய மிகவும் பிரபலமானார் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாகவும் அமைந்தது அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் மேலும் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இதுவரைக்கும் தோல்வியை கண்டிடாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் இவருடைய படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறார்கள் அந்த அளவிற்கு தன்னுடைய தரமான சம்பவத்தை கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக மறுபடியும் நடிகர் விஜய் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அவர்கலே கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஜனனி தளபதி 67 குறித்து ஒரு தகவலை கூறி இருக்கிறார் இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் அதாவது பிக் பாஸில் இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பாதியில் ஆட்டத்தை விட்டு வெளியேறிய ஜனனி தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருவதாக ஒரு சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 பைனலில் பேசிய ஜனனி அவர்களிடம் கமல்ஹாசன் ஜனனியிடம் நீங்கள் இன்னும் இலங்கைக்கு செல்லவில்லையா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜனனி இல்லை சார் நான் என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாத அளவிற்கு வாய்ப்புகள் வந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் ஜனனியிடம் நாசுக்காக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார் சற்றும் எதிர்பார்க்காமல் உடனே பதில் அளித்துள்ளார் ஜனனி அதாவது ஆமாம் சார் என்று ஓபனாக கூறிவிட்டார். ஆனால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தியை அவர் கூறவில்லை ஆனால் விஜயின் மகள் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.