விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்பொழுது வரையிலும் பிக்பாஸ் வீட்டை விட்டு 10 பேர் வெளியேறி உள்ளார்கள் மேலும் தற்பொழுது மீதி இருக்கும் 10 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில் தற்போது நிகழ்ச்சி எழுவது நாட்களை கடந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று ஏன் என்றால் தற்பொழுது இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் சிறப்பாக விளையாடியவர்கள் எனவே இனிவரும் நாட்களில் யார் வெளியேறுவார்கள் என்பது சொல்ல முடியாத அளவிற்கு இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே இந்நிகழ்ச்சியை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் டாஸ்க்களும் கடுமையாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் சுவாரசியமாக இருந்தாலும் நிறைய சண்டை சச்சரவுகள் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியில் அரங்கேறியது. இப்படிப்பட்ட நிலையில் வாரம் தோறும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் கடந்த வாரம் ஜனனிஎலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறினார்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஆரம்பப் பள்ளியாக மாறி இருக்கிறது போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர். இதற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்து தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். அப்பொழுது ரட்சிதாவுடன் சீரியல் நடித்து இருந்தது பற்றிய அசிம் பேசிய விஷயம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
அதாவது போட்டியாளர்கள் அனைவரும் மத்தியிலும் அசிம் பிரிவோம் சந்திப்போம் 2 சீரியலில் நாங்கள் ஒன்றாக நடித்திருக்கிறோம் என்ன முதலில் ஹீரோவாக நடிப்பதற்காக என்னை அழைத்தார்கள். அதுக்காக நான் போனதும் மேடம் பிளாக் மேக்கப் போட மேல உட்கார்ந்துகிட்டு இருந்தாங்க அவங்க பேரு அதுல ஜோதி என் பேரு கார்த்திக் அந்த சீரியல் ஷூட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது சில காரணங்களால் பாதியிலேயே ஸ்டாப் ஆயிடுச்சு என அசிம் தெரிவித்து இருந்தார் மேலும் ரட்சிதா மற்றும் அசிம் இருவரும் இந்த சீரியல் நடித்தது குறித்து தகவலையும் பகிர்ந்து கொண்டார்கள்.