பொதுவாக சினிமாவில் நடித்து வரும் நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல இமேஜ் இருந்தாலும் கூட ஒரு தரப்பு ரசிகர்கள் அவர்களை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அதுவும் முக்கியமாக நடிகைகளை தான் ரசிகர்கள் தவறான வார்த்தைகளால் திட்டி வருகிறார்கள்.
மேலும் நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகை ஒருவர் ரசிகர்களால் தான் நான் மது பழக்கத்திற்கு அடிமையானேன் என பேட்டியளித்து பகீர் கிளப்பி உள்ளார்.
தமிழில் வெளியான நட்பதிகாரம் 79 திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் தேஜஸ்வினி மடிவாடா. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது சினிமாவில் மட்டுமல்லாமல் சாதாரண பெண்களுக்கும் பாலியல் தொல்லை இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சமீப பேட்டியில் இவர் பெண்களுக்கான பாலியல் தொல்லை சினிமா மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் இருந்து வருகிறது சினிமாவுக்கு வந்த புதிதில் நான் கூட இது மாதிரியான பாலியல் தொல்லைகளை எதிர் கொண்டேன் என கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரசிகர்கள் தொல்லையால் மது பழக்கத்தில் அவதிப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றேன் அப்போது நடிகர் கவுஷலின் ரசிகர்கள் என்னை பற்றி ஆபாசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதன் காரணத்தினால் மன உளைச்சலில் மதுவுக்கு அடிமை ஆனேன் எனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து மீண்டேன் என கூறியுள்ளார்.